பந்தலுார் ஐயப்பன் கோவிலில் தாலத்தட்டு ஊர்வலம்
ADDED :3582 days ago
பந்தலுார்: பந்தலுார் ஐயப்பன் கோவிலில் நடந்த தாலத்தட்டு ஊர்வலம் பார்வையாளர்களை கவர்ந்தது.பந்தலுார் ஐயப்பன் கோவிலில் நடந்த வருடாந்திர திருவிழாவில், காலை 9:00 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.மாலை,4:30 மணிக்கு ஐயப்பன் பாலகொம்பு மற்றும் தாலத்தட்டு ஊர்வலம், ஸ்ரீ கருமாரியம்மன் கோவில் வளாகத்திலிருந்து துவங்கியது. பந்தலுார் பஜார் வழியாக கோவிலை சென்றடைந்தது. இரவு, 8:00மணிக்கு குருதி சமர்பனத்துடன் பூஜை நிறைவுபெற்றது.