உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாமகம் ஏற்பாடுகள் அதிகாரிகள் ஆலோசனை

மகாமகம் ஏற்பாடுகள் அதிகாரிகள் ஆலோசனை

சென்னை: தென்னகத்து கும்பமேளா என்று போற்றப்படும் மகாமகம் விழா, 2016 பிப்., 22ம் தேதி, கும்பகோணத்தில் நடைபெறுகிறது. கடந்த மகாமக திருவிழாவில், 35 லட்சம் பக்தர்கள் பங்கேற்றனர். 2016 விழாவில், அதை விட அதிகமாக பங்கேற்பர். எனவே, 120 கோடி ரூபாய், அரசு ஒதுக்கி உள்ளது. மகாமக விழா ஏற்பாடுகள் குறித்து, அறநிலையத் துறை ஆணையர் வீரசண்முகமணி தலைமையில், உயர்மட்ட ஆய்வு கூட்டம், கும்பகோணத்தில், நேற்று நடைபெற்றது. இதில், கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், கோவில் செயல் அலுவலர்கள் கலந்து கொண்டனர். விழா சிறப்பாக நடைபெறவும், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும் ஆலோசிக்கப்பட்டது. இதற்காக, இணை ஆணையர் தலைமையில், 2 ஆய்வாளர்கள் மற்றும், 3 செயல் அலுவலர்கள் கும்பகோணத்தில், ஒரு வாரம் தங்கி வேலைகளை கவனிக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !