உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அன்னுார் அமைதி ஆசிரமத்தில் சிறப்பு பிரார்த்தனை

அன்னுார் அமைதி ஆசிரமத்தில் சிறப்பு பிரார்த்தனை

அன்னுார்: நல்லகவுண்டன்பாளையம், பிரபஞ்ச அமைதி ஆசிரமத்தில், சிறப்பு பிரார்த்தனை நடந்தது. நல்லகவுண்டன்பாளையம், பிரபஞ்ச  அமைதி ஆசிரமத்தில் ஆதரவற்றோர், முதியோர் மற்றும் குழந்தைகள், 300 பேர் உள்ளனர். த.மா.கா., சார்பில், ஜி.கே.வாசன் பிறந்த நாளை  முன்னிட்டு, ஆசிரமத்தில், சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது. உலகம் அமைதி பெறவும், ஒவ்வொருவரும் மன அமைதியுடன், அனைவரிடமும்  அன்பு செலுத்தவும் வேண்டும் உறுதிமொழி வாசிக்கப் பட்டது. ஆசிரமத்தில், 300 பேருக்கு காலை உணவு வழங்கப்பட்டது. பின்னர், மன்னீஸ்வரர்  கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னுார் அரசு மருத்துவமனையில், கடந்த இருநாட்களில் பிறந்த, ஐந்து குழந்தைகளுக்கு தங்க மோதிர ங்களை, த.மா.கா., மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகோபால் வழங்கினார். பிரசவ வார்டில் இருந்த, 18 கர்ப்பிணி தாய்மார்களுக்கு, பிஸ்கட்,  ரொட்டி அடங்கிய பாக்கெட்டுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், கோவை புறநகர் வடக்கு மாவட்ட தலைவர் ராமலிங்கம், மாநில செயலாளர்  கார்த்திகேயன், பொதுக்குழு உறுப்பினர் தம்பு, நிர்வாகிகள் தர்மராஜ், குருசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !