காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவில் திருவீதி உலா
ADDED :3583 days ago
சூலுார்: காங்கயம்பாளையம் ஐயப்பன் கோவில் தேர் பவனி சூலுாரின் முக்கிய வீதிகள் வழியாக நடந்தது. காங்கயம்பாளையம் ஐயப்பன் ÷ காவிலில் மண்டல மகர விளக்கு திருவிழா கடந்த, 6ம்தேதி அகண்ட நாம ஜபத்துடன் துவங்கியது. கேரள நாட்டியம், இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் தினமும் நடந்தன. கடந்த, 22ம் தேதி பறையெடுப்பு அம்மன் சன்னதியில் நடந்தது. பக்தி கானமேளாவை தொடர்ந்து, கடந்த, 26ம்தேதி ஐயப்பனின் அலங்கார ஊர்வலம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரில் ஐயப்பன் ஊர்வலம், பாண்டி மேளம் முழங்க, காங்கயம்பாளையம் பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டது. கலங்கல் ரோடு, சீரணி கலையரங்கம், மெயின்கேட் வழியாக ஜெகநாதர் கோவில் வழியாக ஐயப்பன் கோவிலை வந்தடைந்தது.