காரமடையில் குதிரை வாகனத்தில் பெருமாள் திருவீதி உலா!
ADDED :3587 days ago
மேட்டுப்பாளையம்: காரமடையில் குதிரை வாகனத்தில் பெருமாள், திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காரமடை அரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, ராப்பத்து உற்சவம் நடக்கிறது. எட்டாம் நாள் இரவு அரங்கநாதப் பெருமாள் குதிரை வாகனத்தில், கோவிலில் இருந்து தேர் செல்லும் நான்கு ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின், கோவில் இளைப்பாறு மண்டபத்தில் சுவாமியை வைத்தனர். அங்கு ஸ்தலத்தார் நல்லான் சக்ரவர்த்தி, வேதவியாசர் சுதர்சன பட்டர், ஸ்ரீதர் பட்டர் மற்றும் பக்தர்கள் பாசுரங்களை பாடினர். அதன் பின், சிறப்பு அர்ச்சனை நடந்தது.