உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதாரண்யேஸ்வர் கோவிலுக்கு புதிய தேர் செய்ய ஆலோசனை

வேதாரண்யேஸ்வர் கோவிலுக்கு புதிய தேர் செய்ய ஆலோசனை

வேதாரண்யம்: வேதாரண்யேஸ்வர் கோவிலுக்கு மரத்தால் ஆன புதிய தேர் செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில், மயிலாடுதுறை எம்.பி., ஓ.எஸ்.மணியன், வேதாரண்யம் எம்.எல்.ஏ., காமராஜ், தஞ்சை அறநிலையத்துறை இணை ஆணையர் இளங்கோவன், செயல் அலுவலர் அரசுமணி மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் ரவிச்சந்திரன், குருகுலம் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அரிகிருஷ்ணன், முன்னாள் டவுன் பஞ்சாயத்து தலைவர் சங்கரவடிவேல், அ.தி.மு.க., பொது செயலாளர் சண்முகராஜ், நகர செயலாளர் எழலரசு, மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற பொருளாளர் அம்பிகாதாஸ் மற்றும் திருக்கோவில் திருப்பணி உபயதாரர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். 18 அடி விட்டம் உள்ள மரத்தால் ஆன திருத்தேர் செய்ய முடிவு செய்யப்பட்டு அதுக்கான பூஜை துவக்க விழா ஆவணி மாதம் முதல் தேதியில் நடத்துவது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இணை ஆணையர் இளங்கோ உள்ளிட்ட அதிகாரிகள் தேரோடும் நான்கு வீதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !