பிரஹன்நாயகி அம்மனுக்கு மீனாட்சி அலங்காரம்
உளுந்தூர்பேட்டை : எலவனாசூர்கோட்டை கிராம அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் பிரஹன்நாயகி அம்மன் மீனாட்சி அலங்காரத்தில் அருள்பாலித்தார்.உளுந்தூர்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை கிராம அர்த்தநாரீஸ்வரர் கோவில் கி.பி., 992ம் ஆண்டு முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு பிரஹன்நாயகி அம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மூன்றாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பிரஹன்நாயகி அம்மன் மீனாட்சி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.முன்னதாக அர்த்தநாரீஸ்வரர், பிரஹன்நாயகி அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகளுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ராமதாஸ் தலைமையில் ஜீவானந்தம், விஜி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.