தேரடி விநாயகருக்கு சந்தனக் காப்பு
ADDED :5215 days ago
திருக்கோவிலூர் : திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் தேரடி விநாயகருக்கு சந்தனக்காப்பு விழா நடந்தது.
திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் உள்ள தேரடி விநாயகருக்கு நேற்று முன்தினம் சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. இதனையடுத்து காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜை, மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது.
மாலை 7 மணிக்கு விநாயகர் சந்தனகாப்பு அலங்காரத்தில் சோடசோபோபச்சார தீபாராதனையும், உற்சவ விநாயகருக்கு அலங்கார தீபாராதனையும் நடந்தது. இதனையடுத்து ரிஷப வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி வீதியுலா வந்தார். நேற்று காலை 8.30 மணிக்கு விநாயகருக்கு சந்தனகாப்பு நிறைவு அபிஷேகமும், தீபாராதனை நடந்தது.