உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த பெருமாள் அருள்பாலிப்பு!

சிறப்பு அலங்காரத்தில் வீற்றிருந்த பெருமாள் அருள்பாலிப்பு!

பெண்ணாடம்: மார்கழி மாத வெள்ளிக்கிழமையொட்டி, பெண்ணாடம் வீற்றிருந்த பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதையொட்டி, வேதநாராயண பெருமாள், வேதவல்லி தாயாருக்கு காலை 7:00 மணியளவில் பால், தயிர், சந்தனம், இளநீர், பன்னீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இதேபோல், அரியராவி விநாயகர் கோவிலில் இருந்து, பஜனைக் குழுவினர், சிறுவர்கள் இணைந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடியபடி முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்தனர்.




தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !