உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முத்துமாரியம்மன் கோயிலில் முள் படுக்கையில் பெண் சாமியார்

முத்துமாரியம்மன் கோயிலில் முள் படுக்கையில் பெண் சாமியார்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே லாடனேந்தல் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயிலில் நாகராணி என்ற பெண் சாமியார் முள் படுக்கையில் அமர்ந்து அருள் வாக்கு சொல்லும் நிகழ்வு நடந்தது. லாடனேந்தல் முத்துமாரியம்மன் கோயிலில் படுக்கை வசத்தில் மாசாணியம்மன் சிலை உள்ளது. ஆண்டு தோறும் மார்கழி 18ம் நாள் முள்படுக்கை அருள்வாக்கு நிகழ்ச்சி பிரசித்தம். அருள்வாக்கு வைபவத்திற்காக நாகராணி 40 நாட்களுக்கு முன் விரதம் இருந்தார். 41 வது நாள் மார்கழி 18 அன்று அதிகாலை மாசாணியம்மன், முத்து மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடத்திய பின் முள் படுக்கைக்கு வந்தார். முள் மேடையில் ஏறி சாமி ஆடியபடி அப்படியே படுத்து பக்தர்களின் வேண்டுதலுக்கு ஏற்ப அருள் வாக்கு சொன்னார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !