உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மந்தாரக்குப்பத்தில் தங்க வேலுக்கு சிறப்பு அபிஷேகம்!

மந்தாரக்குப்பத்தில் தங்க வேலுக்கு சிறப்பு அபிஷேகம்!

மந்தாரக்குப்பம: மந்தாரக்குப்பத்தில் பாலதண்டாயுதபாணி பழனி பாதயாத்திரைக்குழு சார்பில் வேலுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.  அதையொட்டி, மந்தாரக்குப்பம் பஸ் நிலையத்தில் இருந்து 12:00 மணியளவில் முருகன், வள்ளி, தெய்வாணை சுவாமிகள் புஷ்ப அலங்காரத்தில் கடை வீதி வழியாக வீதியுலா வந்து, வெற்றி விநாயகர் கோவிலையடைந்தனர்.  தொடர்ந்து கோவிலில் தங்கம் மற்றும் வெள்ளியாலான வேலுக்கு சந்தனம், பால், தயிர், தேன், மூலிகைப்பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் வேலுக்கு அலங்காரம் செய்து ஆறுபடை திருப்புகழ்கள், ஜம்பெரும் புராணங்களை பாடி சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !