அவலூர்பேட்டையில் பழனி சுவாமிக்கு குருபூஜை ஆராதனை விழா
ADDED :3797 days ago
அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் பழனி சுவாமிக்கு குருபூஜை ஆராதனை விழா நடந்தது. மேல்மலையனுõர் ஒன்றியம், அவலூர்பேட்டை மொட்டை விநாயகர் கோவிலில் மகான் ஸ்ரீமத் சற்குரு பழனி சுவாமி, குருபூஜை ஆராதனை விழா நடந்தது. காலையில் மகா அபிஷேக ஆராதனை, பழனி சுவாமியின் உருவப்படத்துடன் வீதி உலா, ஆன்மிக சொற்பொழி, பிற்பகலில் மகா தீபாரதனையும் நடந்தது. பின் அன்னதானம் வழங்கப்பட்டது. மருத்துவர்கள் சமுதாய பேரவையினர் மற்றும் அறநிலைய துறையினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.