சிங்கிரிகுடி கோவில் பாதயாத்திரையில் பக்தர்கள் பங்கேற்பு
புதுச்சேரி: சிங்கிரிகுடி கோவில் பாத யாத்திரையில் ஆயிரக்கணக்கான பக்தர் கள் பங்கேற்று, பஜனை பாடி சென்றனர் புதுச்சேரி லட்சுமி நரசிம்ம பெரு மாள் ஆன்மிக வழிபாட்டு மன்றம் சார்பில், புனித பாத யாத்திரை துவக்க விழா நேற்று காலை 6.௦௦ மணிக்கு காந்தி வீதி வரதராஜப் பெருமாள் கோவிலில் நடந்தது. திருக்கோவிலுார் ஜீயர் சுவாமிகள், சிறப்புரையாற்றி பாத யாத்திரையை துவக்கி வைத்தார். வைத்திக்குப்பம் வெங்கடா ஜலபதி பஜனைக் கூடம், சத்தியநாராயண ராமானுஜதாசன் பஜனை குழுவினருடன், குயவர்பாளையம் அரிகர பஜனை மடம் சார்பில் கிருஷ்ணர் ரதமும், யாத்திரையில் பங்கேற்றது.
புதுச்சேரியிருந்து புறப்பட்டு கடலுார் சாலை வழியாக யாத்திரை சிங்கிரிகுடி சென்றடைந்தது. லட்சுமி நரசிம்ம பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடந்தது. வில்லியனுார் கீழ்அக்ரகாரம் பெரியாழ்வார் திருத்தொண்டு சபை யின் பஜனை, சரண்யா பக்தி இசை, திண்டிவனம் நம்மாழ்வார் சபை ஆஷாவின் அச்சுதனும், பச்சை இலையும் என்ற தலைப்பிலான உபன்யாசம் நடந்தது.திருப்பாவையில் பறை என்ற தலைப்பில் திண்டிவனம் வெங்கடேச ராமானுஜதாசர், லட்சுமிநரசிம்மரும் உக்கிர நரசிம்மரும் என்ற தலைப்பில் ஜோசப் ஆகியோரின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. நிறைவாக தஞ்சை தேவநாத ராமானுஜதாச பாகவதர் குழுவினரின் நாம சங்கீர்த்தனம் நடந்தது. ஆன்மிக வழிபாட்டு மன்ற தலைவர் இளங்கோ, கவுரவ தலை வர் பக்தவச்சலம், ஆடிட்டர் பூவராகவன், ஜெயபிரகாஷ், பொருளாளர் வாசுதேவன், துணைத் தலைவர்கள் ராமமூர்த்தி, நம்பிராஜ், நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், பக்தகோலா கன், சுப்ரமணியன், முகுந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.