மதுரை உருவாக காரணமான இந்திரன்?
மதுரை மீனாட்சியம்மன் பொற்றாமரை குளம் என்ற புனித தீர்த்தம் உள்ளது. அதை நினைவுப்படுத்தும் பொருட்டு, பொன் போன்ற தாமரையை மிதக்க விட்டுள்ளார்கள். ஒரு காலத்தில் இந்த குளத்தில் பொன்னால் ஆன தாமரை இருந்தது. தனது குருவான பிரகஸ்பதியை அவமதிக்க தேவர்களின் தலைவரான தேவேந்திரன், அதற்கு பிராயசித்தமாக பூமியில் ஓர் காட்டுப் பகுதியில் இருந்த சிவலிங்கத்தை வழிபட்டு, அங்கு ஒரு கோயிலும் எழுப்பினான் அம்பிகைக்கு என்று தனி சன்னதியும் அமைத்தான் அங்கிருந்த குளத்தில் பொன்னால் ஆகிய தாமரையை வரவழைத்து சிவலிங்கத்தை பூஜித்தான். இந்த நிகழ்ச்சி நடந்தது ஓர் சித்ரா பவுர்ணமி அன்றுதான். தேவேந்திரன் சிவலிங்கத்தை வழிப்பட்ட காட்டுப் பகுதியே பின்னாளில் மதுரை மாநகர் ஆயிற்று என்கிறார்கள். சித்ரா பவுர்ணமி அன்று சிவலிங்கத்தை வழிபடும் பொருட்டு தேவேந்திரன் மதுரைக்கு வருவதாக சொல்கிறார்கள்.