தானம் கொடுப்பது எப்படி?
ADDED :3963 days ago
கொடை கொடுப்பதில் வல்லவன் கர்ணன். எனவே தான் கர்ணனுக்குப் பின் கொடையுமில்லை என்று பழமொழியும் ஏற்பட்டது. பொதுவாக, கொடை வள்ளல்கள் பலர் நம் நாட்டில் தோன்றியிருக்கிறார்கள். கொடுப்பதற்கு பணம் மட்டும் இருந்தால் போதாது. மனமும் வேண்டும் மனமுவந்து கொடுக்கும் தானம் தான் சிறந்த தானமாகும். வாங்குபவர் மிகுந்த நலிவடைந்த நிலையில் இருந்தாலும் பணிவுடன் கொடுக்க வேண்டும். வாங்குபவன் கை கீழேயும் கொடுப்பவன் கை மேலேயும் வைத்துக் கொடுப்பதுதான் தானம். இரண்டு கைகளும் சம அளவிலிருந்து வாங்கல் - கொடுக்கல் நடத்தினால் அதன் பெயர் அன்பளிப்பாகும்.