உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் ஜெயந்தி விழா: பக்தர்களுக்கு அழைப்பு

அனுமன் ஜெயந்தி விழா: பக்தர்களுக்கு அழைப்பு

ஈரோடு: ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பேச்சிபாறை என்றழைக்கப்படும் வ.உ.சி., பூங்காவில் மகாவீர ஆஞ்நேயர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் அனுமன் ஜெயந்தி விழா, வெகு விமர்சையாக நடந்து வருகிறது. நடப்பாண்டுக்கான விழா, வரும், 9ம் தேதி நடக்கிறது. ஆஞ்சநேயருக்கு உகந்த நாளான சனிக்கிழமையில் வருவதால் சிறப்பானதாக கருதப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலை, 3.30 மணிக்கு விழா தொடங்குகிறது. மகா கணபதி அபிஷேகம், ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், மலர் அலங்கார தரிசனம் நடக்கிறது. பிற்பகல், 1 மணி முதல் மாலை, 5 மணி வரை, ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாத்தப்படுகிறது. வடை மாலை சாத்துதல் நிகழ்ச்சியில் பங்கு பெற விரும்பும் பக்தர்கள், முன்பதிவு செய்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !