நல்லதே நடக்கும்!
ADDED :3962 days ago
ராவணனையும், சுக்ரீவனையும் ஒரு தராசில் வைத்து ஒப்பிடுகிறார் துளசிதாசர். ராவணனுக்கு நல்ல மனைவி, சொல் கேட்கும் பிள்ளை, செல்வம், உடல்வலிமை, சகோதரர்கள் என்று எல்லாம் இருந்தும் பயனில்லை. அவர்களின் சொல்லை அவன் மதிக்கவில்லை. அதுபோல, அவன் தவறு செய்யும் நேரத்தில், அவனைத் திருத்தும் நல்லவர்களின் நட்பும் இல்லை. இதனால் எல்லாம் இருந்தும் அத்தனையும் வீணாய் போனது. சுக்ரீவன் விஷயத்தில் எல்லாமே தலைகீழ். மனைவியையும், பிள்ளைகளையும் இழந்து அண்ணன் வாலியால் நாட்டை விட்டே துரத்தப்பட்டான். ஆனால், ஒரே ஒரு நல்லவனான அனுமன் அவனுக்கு மந்திரியாக கிடைத்தான். அவனது நட்பு, இழந்த அனைத்தையும் அவனுக்கு திருப்பித் தந்தது. இதனால், அனுமன் மீது பக்தி செலுத்துவோருக்கு வாழ்வில் நல்லதே நடக்கும் என்கிறார் துளசிதாசர்.