உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் ஜன.,19 வரை நெய்யபிஷேகம்: 21ல் நடை அடைப்பு!

சபரிமலையில் ஜன.,19 வரை நெய்யபிஷேகம்: 21ல் நடை அடைப்பு!

சபரிமலை: மகரஜோதி தரிசனத்துக்கு பின்னர் ஜன.,19-வரை நெய்யபிஷேகம் நடைபெறும் என்றும், 21ம் தேதி நடை அடைக்கப்படும் என்றும் ÷ தவசம்போர்டு அறிவித்துள்ளது. சபரிமலையில் இந்த ஆண்டு மகரஜோதி தரிசனம் வரும் 15-ம் தேதி நடக்கிறது. அதன் பின்னர் 18 வரை நெய்யபி ஷேகம், 19-ல் மாளிகைப்புறத்தில் குருதி, அன்று இரவு வரை பக்தர்களுக்கு தரிசனம், 20 காலை ஏழு மணிக்கு பந்தளம் மன்னர் பிரதிநிதி  முன்னிலையில் நடை அடைப்பு என அறிவிக்கப்பட்டிருந்தது. திருவிதாங்கூர் தேவசம்போர்டின் 2016-ம் ஆண்டு காலண்டர் மற்றும் டைரியில்  அவ்வாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் மகரவிளக்குக்கு பின் நடை திறந்திருக்கும் நாட்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் தேவசம்போர்டு  மாற்றம் செய்துள்ளது. இதன் படி 19-ம் தேதி காலை 9.30 வரை நெய்யபிஷேகம் நடைபெறும். அன்று 11.30-க்கு தேவசம்போர்டு சார்பில் களபாபி ஷேகம் நடைபெறும். 20-ம் தேதி காலை ஐந்து மணிக்கு நடை திறந்து வழக்கமான உஷபூஜை, உச்சபூஜை, அத்தாழபூஜை போன்றவை  நடைபெற்றாலும், நெய்யபிஷேகம், களபாபிஷேகம் கிடையாது. அன்று இரவு பத்து மணிக்கு நடை அடைக்கும் வரை பக்தர்களுக்கு தரிசனம்  உண்டு. இரவு மாளிகைப்புறத்தில் குருதிபூஜை நடைபெறும். அதன் பின்னர் பக்தர்களுக்கு சன்னிதானத்தில் அனுமதி கிடையாது. 21-ம் தேதி  அதிகாலை ஐந்து மணிக்கு நடை திறந்து அபிஷேகம், கணபதி ஹோமம் நடத்திய பின்னர் பந்தளம் மன்னர் பிரதிநதி முன்னிலையில் நடைஅடைக்கப்படும்.  தேவசம்போர்டின் புதிய அறிவிப்பு மூலம் மகரவிளக்குக்கு பின்னர் நடை திறந்திருக்கும் நாள் ஒரு நாள் அதிகமாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !