திருக்கண்ணாடி அறையில் வரதராஜ பெருமாள் அருள்பாலிப்பு!
ADDED :3765 days ago
பண்ருட்டி: பண்ருட்டி வரதராஜ பெருமாள் திருக்கண்ணாடி அறையில் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த 6ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடந்து, 7ம் தேதி முதல் மண்டலாபிஷேக பூஜைகள் துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் 29ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு மாலை 4:00 மணிக்கு மூலவர் வரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயார், ஆஞ்சநேயர் சுவாமிக்கு சி றப்பு பூஜை நடந்து, இரவு 7:00 மணிக்கு திருக்கண்ணாடி அறையில் உற்சவர் பெருமாள் ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசித்தனர்.