உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நல்ல எண்ணத்துடன் செயல்களை செய்வோம்!

நல்ல எண்ணத்துடன் செயல்களை செய்வோம்!

செயல்கள் அனைத்தின் விளைவுகளும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. மனிதன் எதை எண்ணுகிறானோ, அதற்குரிய பலன் தான் அவனுக்குக் கிட்டும். உதாரணமாக ஒருவரின் ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் அமையுமாயின் அந்த ஹிஜ்ரத் அல்லாஹ்வுக்காகவும், ரஸூலுக்காகவும் செய்யப்பட்டதாகும். ஒருவரின் ஹிஜ்ரத் ஏதாவது உலகாயத நன்மையைப் பெறுவதற்காகவோ, ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்காகவோ அமையுமாயின் இவற்றில் எதற்காக வேண்டி அவன் ஹிஜ்ரத் செய்தானோ, அதற்கானதாகவே அவனது ஹிஜ்ரத் கணிக்கப்படும், என்கிறார் நபிகள் நாயகம்  நபிகளாரின் இந்தப் பொன்மொழிக்குப் பொருள் இதுதான். நற்செயல்களின் விளைவுகள், எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளன. எண்ணம் சரியானதாக இருப்பின், அந்த நற்செயலுக்கான கூலி கிடைக்கும். இல்லையெனில் கிடைக்காது. அச்செயல் இறைவனின் திருப்திக்காகச் செய்யப்பட்டு இருந்தால் தான், மறுவுலகில் அதற்கான நற்கூலி கிடைக்கும். அந்தச் செயலை, ஒருவன் உலகத் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள செய்திருந்தால் மறுவுலகில் அச்செயல் விலை போகாது. அதற்கு மதிப்பு இருக்காது. அவனது இந்தச் செயல் அங்கு செல்லாக் காசாகக் கருதப்படும். இறைவன் உங்கள் உருவங்களையோ உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை; மாறாக, உங்கள் உள்ளங்களையும் செயல்களையும் தான் பார்க்கின்றான், என்றும் நாயகம் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !