உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இதோ ஒரு அற்புத நிகழ்ச்சி!

இதோ ஒரு அற்புத நிகழ்ச்சி!

ஒரு சமயம் அபூஜஹல் என்பவனும், அவனுடன் ஒரு சிலரும் நபிகளாரிடம் வந்து, உமது மார்க்கம் உண்மையான மார்க்கம் என்றால் அமாவாசை இருட்டு வேளையில் வான்மதியை உதிக்கச் செய்து அந்த மதியை இரண்டாகப் பிளந்து காட்டும், என்று கூறினார்கள். நீங்கள் கூறுவது போன்று நான் அல்லாஹ்வின் உதவியால் செய்து காட்டினால் நான் நபி என்று ஒப்புக் கொள்வீர்களா? என்று நபிகளார் கேட்டபோது, நிச்சயம் ஒப்புக் கொள்கிறோம், என்று பதில் கூறினர். நபிகளார் தங்களின் புனித விரலின் மூலம் வான்மதியை அழைத்தவுடனே வான்மதி தோன்றி இருதுண்டாகப் பிளந்து பார்ப்பவர்கள் முன் காட்சியளித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !