உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உள்ளத்தில் உறுதி இருந்தால் உலகமே உங்கள் கையில்!

உள்ளத்தில் உறுதி இருந்தால் உலகமே உங்கள் கையில்!

*உள்ளத்தில் உறுதி இருந்தால் உலகமே உங்கள் கைக்கு வந்து விடும். எண்ணத்தில் ஒழுங்கு இருந்தல் எண்ணியதெல்லாம் அப்படியே நடக்கும். உண்ணும் உணவு உடலுக்குள் மட்டுமே பாயும். ஆனால், எண்ணிய எண்ணமோ உலகெங்கும் பாயும் சக்தி படைத்தது.
*எல்லா உயிர்களிடத்திலும், பொருள்களிடத்திலும் கடவுளைக் காண வேண்டும். இப்படிப்பட்ட உயர்நிலையான அறிவை மனிதன் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
*ஒருவன் தன்னைத் தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் அவனது மனதைப் பொறுத்தது. மனதை அடக்க நினைத்தால் அலையும். ஆனால், அறிய நினைத்தால் அடங்கி விடும்.
*நற்செயல்களில் ஈடுபட்டு அதனால் உலக மக்கள் பயனடைவதைக் காண்பவர்க்கே மனநிறைவு கிடைக்கும். அந்நிலையில் மக்கள் வாயார வாழ்த்துவது தான் உண்மையான புகழாகும்.
*தனிமனிதன் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்ந்தால், உலக சமுதாயம் முழுவதும் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் வாழும்.
*ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும் வாழ்க வையகம், வாழ்க வளமுடன் என்று நாம் வாழ்த்த வேண்டும். இந்த வாழ்த்து அலை மனித சமுதாயத்திற்கே நன்மை அளிக்கும்.
*பிறரை வாழ்த்தும் மனம் படைத்தவர்கள் செல்லும் இடம் எல்லாம் நன்மையே நடக்கும். அவர்களால் தீயவரும் கூட நல்லவராக மாறி விடுவார்கள்.
*நாம் அனைவரும் சமுதாயத்தின் உதவியுடன் தான் வாழ்கிறோம். அதற்கு நன்றிக்கடனாக நம்முடைய உடலாலும், அறிவாலும் சமுதாயத்திற்கு தொண்டாற்ற வேண்டும்.
*வீட்டில் அன்பு, அருள், இன்முகம் இவற்றோடு கூடிய நல்லவர்களின் உருவப்படங்களை மாட்டி வையுங்கள். இதனால் குடும்பத்தில் இன்பமும், அமைதியும் நிலைத்திருக்கும்.
*ஆக்கத்துறையில் அறிவைச் செலுத்துங்கள். ஊக்கமுடன் பணியில் ஈடுபடுங்கள். குறிக்கோளை நோக்கி செயல்படுங்கள். வாழ்வில் நிச்சயம் உயர்வு பெறுவீர்கள்.
*உடையில் ஒழுக்கம், உள்ளத்தில் கருணை, நடையில் கண்ணியம் இந்த மூன்றும் நல்ல மனிதர்களின் அடையாளங்கள்.
*கடமையறிந்து செயலாற்றினால் சமுதாயத்தில் உள்ள அனைவரின் உரிமைகளும், நலன்களும் முழுமையாகக் காக்கப்படும்.
*மனத்துõய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு, சரியான ஓய்வு இவற்றை பின்பற்றினால் நோய் இல்லாமல் உடல்நலத்துடன் வாழ முடியும்.
*உலகில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் கடவுளின் செயலாகவே விளங்குகிறது. இதை மனிதன் உணர்ந்து இயற்கையை மதித்து வாழ வேண்டும்.
*அருட்பேராற்றல் இரவிலும், பகலிலும் எல்லா நேரத்திலும் நமக்கு உறுதுணையாகவும், பாதுகாப்பாகவும் வழிநடத்த வேண்டும் என்று பிரார்த்தனைசெய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !