மருந்து மலை!
ADDED :3962 days ago
ராஜபாளையம் அருகிலும், கன்னியாகுமரி அருகிலும் உள்ள பல மலைகள் மூலிகைகளைக் கொண்டதாக உள்ளன. இலங்கையில் ராவணனுடன் போர் செய்தபோது, லட்சுமணன் மூர்ச்சையானான். அவனை எழுப்ப ஒரு மூலிகையைப் பறித்து வரும்படி அனுமனை அனுப்பினார் ராமன். எந்த மூலிகை எனத் தெரியாததால், அந்த மூலிகை இருந்த மலையையே பெயர்த்து வான்வெளியில் பறந்து வந்தார் அனுமன். அந்த மலையில் இருந்து சிதறிய சில துண்டுகள் கீழே விழுந்ததாக தல வரலாறு கொண்ட அனுமன் கோவில்கள் ராஜபாளையம் மற்றும் கன்னியாகுமரி அருகில் இருப்பதாக சொல்வதுண்டு. மூலிகை கொண்ட மலைகள் என்பதால் சஞ்சீவிமலை என்றும், மருந்து வாழ்மலை என்றும் இந்த மலைகள் அழைக்கப் படுகின்றன.