உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காணும் பொங்கலன்று பார்வேட்டை உற்சவம்

காணும் பொங்கலன்று பார்வேட்டை உற்சவம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர், திம்மசமுத்திரம் கிராமத்திற்கு செல்லும் பார்வேட்டை உற்சவம் காணும் பொங்கல் அன்று, வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது. காஞ்சிபுரம் அடுத்த, திம்மசமுத்திரம் கிராமத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோவிலுக்கு, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் செல்லும் பார்வேட்டை உற்சவம் ஆண்டுதோறும், காணும் பொங்கல் அன்று நடைபெறும்.அதேபோல், இந்த ஆண்டு, வரும் 17ம் தேதி, காலை 8:00 மணியளவில், ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்து, மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு செல்வார்.இந்த உற்சவத்தில், ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு, சாமியை ஊர்வலமாக அழைத்து செல்வர். வழியெங்கும் சாமிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு, மதியம் 1:00 மணியளவில், திம்மசமுத்திரம் கோவிலை சென்றடைவார். அங்கு ஏகாம்பரநாதர் ஏழவார்குழலி அம்பாளுக்கு மகா அபிஷேகம் நடைபெறும். பின் தரிசனம் முடிந்து, இரவு 9:00 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு 12:00 மணியளவில், காஞ்சிபுரம் கோவிலை சென்றடைவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !