உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்காமீஸ்வரர் கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்

திருக்காமீஸ்வரர் கோவில் திருப்பணிக்கு நிதியுதவி வழங்கல்

வில்லியனுார்: திருக்காமீஸ்வரர் கோவில் திருப்பணிக்கு நமச்சிவாயம் எம்.எல்.ஏ., தனது சொந்த நிதியை வழங்கினார்.வில்லியனுார் பழமை வாய்ந்த கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகவிழா வரும் 20ம் தேதி நடக்கிறது. கோவில் திருப்பணி வேலைகள் இரவு பகலாக நடந்து வருகிறது.கோவில் திருப்பணிக்கு தொழிலதிபர்கள், தனியார் நிறுவனங்கள், பொது மக்கள் நிதி வழங்கி வருகின்றனர். வில்லியனுார் தொகுதி எம்.எல்.ஏ., நமச்சிவாயம் கோவில் திருப்பணிக்காக தனது சொந்த பணம் ரூ. 3 லட்சத்தை திருப்பணி கமிட்டி தலைவர் பூபதியிடம் வழங்கினார். தெற்கு மாவட்ட காங்., துணைத் தலைவர் பிரபாகரன் தனது சொந்த பணம் ரூ. 2 லட்சத்தையும் திருப்பணி கமிட்டி தலைவரிடம் வழங்கினார்.மாநில காங்., நிர்வாகிகள் ஏகாம்பரம், கண்ணபிரான், தேவராசு, விஸ்வநாதன், ஜனார்த்தனன், சம்சுதீன், திருப்பணி கமிட்டி உறுப்பினர் ரகு, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !