உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீர ஆஞ்சநேயர் கோவிலில் 9ம் தேதி அனுமன் ஜெயந்தி

வீர ஆஞ்சநேயர் கோவிலில் 9ம் தேதி அனுமன் ஜெயந்தி

கடலுார்: திருப்பாதிரிப்புலியூர் வீர ஆஞ்சநேயசுவாமி கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா வரும் 9ம் தேதி நடக்கிறது. இது குறித்து செயல் அலுவலர் கொளஞ்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கடலுார், அண்ணா பாலம் அருகில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் கோவிலில் வரும் 9ம் தேதி ஸ்ரீஅனுமன் ஜெயந்தி விழா நடக்கிறது.  அதனையொட்டி அன்று காலை 8.30மணிக்கு திருமஞ்சனமும், பகல் 11 மணிக்கு மகாதீபாராதனையும், இரவு 7 மணிக்கு சுவாமி வீதியுலா நடக்கிறது. மாலை 6மணிக்கு ஆஞ்சநேயர் பெருமை எனும் தலைப்பில் குறிஞ்சிப்பாடி கம்பன் வைத்தியநாதன் சொற்பொழிவு நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !