உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோதண்டராமர் கோவிலில் ரிக் வேத மகா ஹோமம்

கோதண்டராமர் கோவிலில் ரிக் வேத மகா ஹோமம்

கோவை: ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தியை முன்னிட்டு ரிக் வேத மகா ஹோமம், ராம்நகர் கோதாண்டராமசாமி கோவிலில் நாளை துவங்குகிறது. கல்வித் திறன், திருமண பாக்கியம் உள்ளிட்ட சவுபாக்கியம் பெறுவதற்காக இந்த ஹோமம் நடத்தப்படுகிறது. நாளை மதியம், 12:00 மணிக்கு, மகா பூர்ணாஹூதி நடக்கிறது. வரும், 9ல் நடக்கும் ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தியில், காலை, 5:30 முதல், 8:30 மணி வரை பவமான ஹோமம், ஸ்ரீ ஹரிவாயுஸ்துதி ஹோமம் ஆகியவை நடக்கிறது. மாலையில் மங்கள வாத்தியம், வேத கோஷம், குழந்தைகளின் கோலாட்டம் மற்றும் பஜனைகளுடன் ஆஞ்சநேயரின் திருவீதி உலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !