புத்துணர்வு முகாமில் மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி பங்கேற்பு!
ADDED :3621 days ago
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி, புத்துணர்வு முகாமிற்கு நேற்று புறப்பட்டது. தமிழக கோவில்களில் உள்ள யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் 48 நாட்கள் புத்துணர்வு முகாம் நடத்தப்படுகிறது.இந்தாண்டு, கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க, காரைக்கால் திருநள்ளார் கோவில் யானை பிக்ருதி நேற்று முன்தினம் புறப்பட்டு சென்றது.புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி,நேற்று காலை 6:00 மணிக்கு குருமாம்பேட் காமராஜர் வேளாண் அறிவியல் நிலைய வளாகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, அங்கிருந்து லாரி மூலம் மேட்டுப்பாளையம் யானைகள் புத்துணர்வு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.