உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விவேகானந்த நவராத்திரியை முன்னிட்டு தெய்வீக புத்தகத் திருவிழா!

விவேகானந்த நவராத்திரியை முன்னிட்டு தெய்வீக புத்தகத் திருவிழா!

சென்னை: திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ஐஸ்ஹவுஸ் எனப்படும் விவேகானந்தர் இல்லத்தில் பிப்ரவரி 6 முதல் 14 வரை விவேகானந்த நவராத்திரியை முன்னிட்டு தெய்வீக புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இதில் இளைஞர் முன்னேற்றம்- இளமை சக்தி- சிறுவர் பண்பாட்டுக் கதைகள்-ஆன்மீகக் கதைகள்- பக்தி-வேதாந்தம்- மன நலன்-தியானம்-யோகம்-இந்திய கலாச்சாரம்-பாரதப் பெருமை-ஸ்ரீராமகிருஷ்ணர்-ஸ்ரீசாரதாதேவி- சுவாமி விவேகானந்தர் போன்ற தலைப்புகளில் 1000-க்கும் மேற்பட்ட ஸ்ரீராமகிருஷ்ண மடத்து நூல்களின் கண்காட்சி நடைபெற உள்ளது.  இந்த புத்தகங்கள் அனைத்திற்கும் 20% வரை தள்ளுபடி உண்டு.

தொடர்புக்கு: சுவாமி விமூர்த்தானந்தர், மேனேஜர், ஸ்ரீராமகிருஷ்ண மடம்,
சென்னை-4. மொபைல்: 9884036372.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !