சபரிமலையை தேசிய வழிபாடு மையமாக அறிவிக்க கோரி.. பம்பா சங்கமம்!
ADDED :3620 days ago
சபரிமலை: சபரிமலையை தேசிய வழிபாடு மையமாக அறிவிக்க கோரி, ஐந்து மாநில பிரதிநிதிகள் பங்கேற்ற பம்பா சங்கமம் நிகழ்ச்சியை கேரள முதல்வர் உம்மன்சாண்டி தொடங்கி வைத்தார். தமிழகம் சார்பில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், காமராஜ் கலந்து கொண்டனர். இதில் ராஜ்யசபா துணை தலைவர் பி.ஜெ. குரியன், கேரள உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னித்தலா, தமிழக அமைச்சர்கள் பன்னீர்செல்வம், காமராஜ், தெலுங்கானா அமைச்சர் இந்திரகரன்ரெட்டி, கர்நாடகா அமைச்சர் மஞ்சு, கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் இப்ராகிம்குஞ்சு, தேவசம்போர்டு உறுப்பினர்கள் குமாரன், அஜய் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய அனைவரும், சபரிமலை தேசிய வழிபாடு மையமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, அதன் பின்னர் சர்வதேச வழிபாட்டு மையமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தனர்.