ராமேஸ்வரத்தில் ஸ்படிக லிங்க பூஜை
ADDED :5215 days ago
ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித்திருக்கல்யாண திருவிழா 17ம் திருநாளை முன்னிட்டு, நேற்று அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடந்தது.
காலை 6 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தனி அம்பாள் மற்றும் பெருமாளுடன் தங்கக்கேடயத்தில் ரதவீதியில் உலா வந்து கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளினர். அங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன. மாலை 6 மணிக்கு ஒளி வழிபாடு முடிந்தது. மீண்டும் ரதவீதியில் உலாவந்து கோயிலுக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையொட்டி நேற்று காலை 6 மணிக்கு மேல் கோயில் நடைசாத்தப்பட்டது. தீர்த்தங்களும் அடைக்கப்பட்டன.