உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பாலபிஷேகம்!

சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயருக்கு 500 லிட்டர் பாலபிஷேகம்!

சின்னாளப்பட்டி: சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அனுமத் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு  500 லிட்டர் பாலபிஷேகம் நடந்தது.

வைகை நதியே தென்பாகமே அமைத்து வளம் கொழிக்கும் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி மேட்டுப்பட்டியில் அமைந்து அருள்தரும் அஞ்சலி வரத ஆஞ்சநேயர் சுவாமி மிகவும் சக்தி வாய்ந்தவர். இக்கோயிலில் இன்று(ஜன.8ல்) காலை 8 மணிமுதல் பஞ்ச சூக்த ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், அனுத் சகஸ்ர நாம ஹோமம், 10. 00 மணியளவில் மஹா பூர்ணாஹுதி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து காலை 10.30 மணியளவில் மிக பிரம்மாண்டமாக 500 லிட்டர் பால் அபிஷேகம், 108 இளநீர் அபிஷேகம் மற்றும் 16 வகையான திரவியங்களுடன் அபிஷேகமும் அதை தொடர்ந்து ஏழுவகையான வர்னாபிஷேகமும் நவ கலச கும்ப அபிஷேகமும் நடைபெற்றது. விழாவில் சுவாமி தங்க கவசத்தில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இன்று இரவு  7.00 மணியளவில் இதுவரை எந்த ஸ்தலத்திலும் செய்யப்படாத அதி அற்புதமான புஷ்பாஞ்சலி வைபவம் நடைபெறும். 7 வகையான உதிரி புஷ்பங்களால் அபிஷேகம் நடைபெறுகிறது. நாளை(ஜன.9ல்) 1008 ஜிலேபி மாலையுடன் வஜ்ர அங்கி கவச சேவையுடன் சிறப்பு அலங்காரம் நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை சுந்தர்ராஜ பட்டாச்சாரியார் மற்றும் மீனாட்சி கனகராஜ் அறக்கட்டளையினரும், பொதுமக்களும் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !