ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம்: நன்கொடை வழங்க அழைப்பு
ராமேஸ்வரம்,: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி, ஆன்மிக அன்பர்கள் நன்கொடை வழங்கலாம்.பன்னிரெண்டு ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், ரூ. 7.90 கோடியில் திருப்பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. 400 ஆண்டுகளாக மொட்டை கோபுரமாக காட்சியளித்த வடக்கு, தெற்கு ராஜகோபுரம் தற்போது 5 நிலைகளுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஜன.,20ல் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. கோயில் வரலாற்றில் 4 கோபுரத்திற்கும் கும்பாபிஷேகம் நடப்பது இதுவே முதல் முறை.கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் கணபதி ஹோமத்துடன் ஜன., 15 ல் துவங்குகிறது. ஜன., 16 முதல் 20 வரை 8 கால யாக பூஜைகள் நடக்கிறது. இதற்காக கோயிலின் அருகில் உள்ள நந்தவனத்தில் 108 யாக குண்டங்களுடன் பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.ராமர் பூஜித்த பெருமைக்குரிய ராமநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகத்திற்கு ஆன்மிக அன்பர்கள் நன்கொடை வழங்கலாம். நேரடியாக நன்கொடை வழங்குவோர், கோயில் அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ளலாம். காசோலை, வரவோலையை joint commissioner/EO, அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம் என்ற பெயரில் எடுத்து அனுப்ப வேண்டும்.