சின்னாளப்பட்டி ஆஞ்சநேயருக்கு பாலாபிஷேகம்
ADDED :3686 days ago
சின்னாளப்பட்டி:சின்னாளப்பட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. காலை 8 மணிக்கு யாக பூஜைகள் துவங்கின. பஞ்ச சூக்த ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், அனுத் சகஸ்ர நாம ஹோமம் நடந்தன. மஹா பூர்ணாஹுதி முடிந்ததும், பால் அபிஷேகம், 108 இளநீர் அபிஷேகம் மற்றும் 16 வகை திரவியங்கள் அபிஷேகம் நடந்தன. பின்னர் ஏழுவகை வர்ணாபிஷேகம், நவ கலச கும்ப அபிஷேகமும் நடந்தன. இதையடுத்து சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்ட ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 7.00 மணியளவில் புஷ்பாஞ்சலி நடந்தது. பல்வேறு வகையான மலர்களால் அபிஷேகம் நடந்தது. இன்று (ஜன.9ல்) 1008 ஜிலேபி மாலை, வஜ்ர அங்கி கவச சேவையுடன் சிறப்பு அலங்காரம் நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை சுந்தர்ராஜ பட்டாச்சாரியார் மற்றும் மீனாட்சி கனகராஜ் அறக்கட்டளையினர் செய்துள்ளனர்.