உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தல்லாகுளம் தர்ம முனீஸ்வரர் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

தல்லாகுளம் தர்ம முனீஸ்வரர் கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா

மானாமதுரை: மானாமதுரை தல்லாகுளம் தர்ம முனிஸ்வரர் கோயில் முகூர்த்தக்கால் நடும் விழாவில் ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர்.


மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் மானாமதுரை நகரின் துவக்கத்தில் சாலையின் நடுவே அமைந்துள்ள காவல் தெய்வமான தல்லாகுளம் தர்மமுனீஸ்வரர் கோயிலில் வருடம் தோறும் கிடாய் வெட்டு திருவிழா நடைபெறுவது வழக்கமாக உள்ளது. இந்த வருடத்திற்கான திருவிழா வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் விழாவின் துவக்கமாக இன்று காலை கோயில் முன்பாக முகூர்த்தக்கால் நடப்பட்டு சுவாமிக்கு 18 வகையான மூலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை, பூஜைகள் நடந்தது. இதனைத் தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தங்களது கைகளில் காப்புகளை கட்டி விரதத்தை துவக்கினர். வருகிற 19 ஆம் தேதி காலை ஏராளமான ஆட்டுக்கிடாய்கள் சுவாமிக்கு பலி கொடுக்கப்பட்டு பின்னர் சிறப்பு அன்னதானம் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தல்லாகுளம் கரும்பு முனிஸ்வரர் கோயில் நிர்வாகிகள் விழா கமிட்டியினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !