உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

செஞ்சி: வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. செஞ்சி தாலுகா, வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன்  கோவிலில் நேற்று முன்தினம் இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்,  அலங்காரம் செய்தனர். பகல் 1:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. இரவு 7:00 மணிக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 8:00 மணிக்கு சிறப்பு  சொற்பொழி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 9:00 மணிக்கு அங்காளம்மனுக்கு ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. பக்தி பாடல்கள் பாடி  அம்மனை வழிபட்டனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அறங்காவலர் புண்ணியமூர்த்தி மற்றும் விழா குழுவினர் உற்சவ  ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !