வீரஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி சுவாமி புறப்பாடு
ADDED :3714 days ago
அவிநாசி: அவிநாசியில் உள்ள வீரஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சுவாமி வீதியுலா நடந்தது. விழாவில், சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. கோத்தகிரி, அரையட்டி அருணாச்சல மஹிமா, தத்வன சைதன்யா சுவாமி மற்றும் அவரது குழுவினர், பக்தி பாடல் பாடினர்.இரவு, 7:00க்கு, ஸ்ரீராமர், சீதாதேவி, ஸ்ரீலட்சுமணர் ஆகியோருடன், ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, வீதியுலா சென்றார். ஸ்ரீவீர ஆஞ்சநேயர் பக்தர் பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.