முருங்கப்பாக்கத்தில் கிருஷ்ணசுவாமி வீதியுலா
ADDED :3698 days ago
புதுச்சேரி: முருங்கப்பாக்கம் ராமானுஜ பஜனை மடம் கோவிலில் பின்னைமர வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ராமானுஜ பஜனை மடம் கோவிலில், ஆண்டாள் திருக்கல்யாண கூடாரவல்லி உற்சவத்தை முன்னிட்டு, நேற்று மாலை 6.00 மணிக்கு பின்னைமர வாகனத்தில் கிருஷ்ணசுவாமி வீதியுலா நடந்தது. இன்று (12ம் தேதி) காலை 10.35மணிக்கு மேல் 11.35 மணிக்குள் ஆண்டாள் திருக்கல்யாணம் நடக்கிறது. நாளை (13ம் தேதி) மாலை 6.30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் மக்கள் செய்துள்ளனர்.