சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் திருப்பாவை விழா
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு சேதுநாராயணப்பெருமாள் கோயிலில் திருப்பாவை விழா நடந்தது. கோயில் சேவா சமிதி டிரஸ்ட் தலைவர் ராஜகோபாலன் தலைமை வகித்தார். செயலாளர் நாராயணன் வரவேற்றார். கோயில் செயல்அலுவலர் அறிவழகன் முன்னிலை வகித்தார். மாணவர்கள், பெண்களுக்கு திருப்பாவை பாராயணப்போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் கலைநிகழ்ச்சி, மாதர்குழுவினரின் பஜனை வழிபாடு , ராம பக்தர்களின் நாமசங்கீர்த்தன வழிபாடு நடந்தது. உறுப்பினர் நாகசுப்பு நன்றி கூறினார்.* ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் வைத்தியநாதசுவாமி கோயிலில், மாவட்ட அளவிலான பாவை விழா நடந்தது. விருதுநகர் இந்துசமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன் தலைமை வகித்தார். 44 பள்ளிகளை சேர்ந்த 200க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி, கட்டுரைபோட்டி நடந்தது. புலவர் பாலகிருஷ்ணன் மற்றும் சொற்பொழிவாளர் முத்துசாமி நடுவாரக பணியாற்றினர். பங்கேற்ற மாணவ,மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது.