உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமன் ஜெயந்தி விழா: பக்தி இன்னிசை நிகழ்ச்சி

அனுமன் ஜெயந்தி விழா: பக்தி இன்னிசை நிகழ்ச்சி

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அர்த்தநாரிபாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அழகு திருமலைராயப்பெருமாள் கோவிலில், அனுமன் ஜெயந்தி விழா நடந்தது. விழாவையொட்டி, உருமி கும்மியாட்டம் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு பூஜைகள், கோசாலை துவக்க விழா ததேவனாந்தா சரஸ்வதி சுவாமி தலைமையில் நடந்தது. உடுமலை வர்ணமாலிகா இசைப்பள்ளி மாணவ, மாணவியர் வழங்கும் பக்தி இன்னிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. ஆனைமலை ரங்கநாத பெருமாள் கோவிலில், அனுமன் ஜெயந்தியையொட்டி அபிேஷகம் உள்ளிட்ட சிறப்பு அபிேஷகம், வடைமாலை சாற்றுதல் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. இதுபோன்று, கிருஷ்ண ஆஞ்சநேயர் கோவில், ஈஸ்வரன் கோவிலில் உள்ள அனுமன் சன்னதி மற்றும் தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சன்னதியிலும் அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !