திருப்பாவை திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி!
ADDED :3695 days ago
விருத்தாசலம்: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாணவர்களுக்கான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நடந்தது. மார்கழி மாதத்தில் பெருமாள், சிவன் கோவில்களில் திருப்பாவை, திருவெம்பாவை முற்றோதல் நிகழ்ச்சிகள் நடப்பது வழக்கம். கடந்த 2011 முதல் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவின் படி, ஆண்டுதோறும் மாணவர்களுக்கான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நடத்தப்படுகிறது. அதன்படி, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு செயல் அலுவலர் கொளஞ்சி தலைமை தாங்கினார். ஆய்வர் சுபத்ரா முன்னிலை வகித்தார். கொளஞ்சியப்பர் கல்லுாரி தமிழ்துறை தலைவர் சிவக்குமார் போட்டியை துவக்கி வைத்தார். அதில், 16 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.