உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவிலில் சன்னிதிக்கும் போகாமல் முக்கிய சன்னிதிகளில் மட்டும் வழிபட்டால் போதாதா?

கோவிலில் சன்னிதிக்கும் போகாமல் முக்கிய சன்னிதிகளில் மட்டும் வழிபட்டால் போதாதா?

கோவிலில் உள்ள ஒவ்வொரு சன்னிதிக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. நம் வாழ்க்கைக்கு எல்லாமே தேவைப்படுகிறதே! பிரதான சன்னிதி என்பது ஜனாதிபதி என்று உதாரணத்திற்கு வைத்துக் கொள்வோம். குடும்ப அட்டை பெற அவரைப் போய் பார்க்கத் தேவையில்லையே. நம் ஊர் பிரச்னையை மாவட்ட கலெக்டர் தீர்த்து விடுவார் இல்லையா! அதுபோல் தான் கோவிலும். நாட்டில் நடப்பதெல்லாம் ஜனாதிபதியின் ஆணை என்றாலும், தனித்தனி துறைகளாக இயங்கி நிர்வாகம் செயல்படுகிறது. அதுபோல எல்லாமே பிரதான மூலஸ்தான சக்தி தான் என்றாலும், அவரது ஆணை பெற்று அருளும் அந்தந்த தெய்வங்களை வழிபடும் நன்னெறியைக் காட்டவே பரிவார சன்னிதிகள் உள்ளன. எனவே கோவிலிலுள்ள அனைத்து சன்னிதிகளையும் தரிசிப்பதே முறையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !