தலைவாசலில் அமர்ந்து சாப்பிடவோ தூங்கவோ கூடாது என்பது ஏன்?
ADDED :3955 days ago
வீடு என்பது கோவில் போன்றது. அதன் வாசல் நிலை (தலைவாசல்) என்பது அக்கோவிலின் தெய்வசக்தியை அதாவது வீட்டின் மங்களத்தை உள்ளிழுக்கும் தோரண வாயிலாகும். அதை தினமும் மெழுகி கோலமிட்டு விளக்கேற்றி வைத்து தெய்வசக்தியும், லட்சுமி கடாட்சமும் தலைவாசல் வழியாக வீட்டுக்குள் வர வேண்டும் என வேண்டிக் கொள்ள வேண்டும். அதனால் தூங்குவது, சாப்பிடுவது போன்றவற்றை அங்கு செய்யக்கூடாது.