உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூன்று நாள் பொங்கல்!

மூன்று நாள் பொங்கல்!

சூரியனின் ஓராண்டுப் பயணத்தை உத்ராயணம், தட்சிணாயனம் என இரண்டாகப் பிரிப்பர். உத்ராயணம் என்பது தை முதல் ஆனி வரையுள்ள ஆறுமாத காலமாகும். இதில் முதல் நாளான தை மாதப்பிறப்பு மகர சங்கராந்தி எனப்படுகிறது. அன்று மகர ராசியில் பிரவேசிக்கும் சூரியன், தன் வடதிசை பயணத்தை ஆரம்பிக்கிறார். அன்று முதல் ஆறு மாதங்களுக்கு மங்களநாட்களே. இந்த நாட்களில் தங்கள் இல்லங்களில் மங்களநிகழ்ச்சிகள் நடந்தேற கண்கண்ட தெய்வமான சூரியனை வணங்க வேண்டும். இந்த நாளில் புது நெல்லில் பொங்கல் படைத்து நம் நன்றியை சூரியனுக்குச் செலுத்த வேண்டும். பொங்கலுக்கு மறுநாள் விவசாயப்பணிக்கு உதவிய காளை, பசு மாடுகளுக்கும் பொங்கலிட்டு மாட்டுப் பொங்கலாக கொண்டாட வேண்டும். அதற்கு மறுநாள் பெரியவர்களிடம் ஆசி பெறும் காணும் பொங்கலை நடத்த வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !