தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம்!
ADDED :3697 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நேற்று நடந்தது. கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் மார்கழி மாதத்தையொட்டி தனுர் மாத சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. தீவிர பெருமாள் பக்தையான ஆண்டாள் பெருமாளையே திருமணம் செய்துகொள்ள வேண்டி, பாவை விரதம் இருந்தார். விரத பூர்த்தி தினமான நேற்று, கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் கூடாரவல்லி உற்சவம் நடத்தினர். காலையில் சீதேவி, பூதேவி, பெருமாள், ஆண்டாள் உற்சவர் சிலைகளுக்கு அலங்கார திருமஞ்சனம் நடந்தது. சிறப்பு அலங்காரத்திற்குபின் ஆண்டாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. சேவை, சாற்றுமுறை பூஜைகள் நடந்தது. ஆண்டாள் பக்தர்கள் திருவெம்பாவை பாடினர். வழிபாட்டினை தேசிக பட்டர் செய்து வைத்தார்.