கருமாரியம்மன் கோவிலில் 108 விளக்கு பூஜை
ADDED :3765 days ago
சேலம்: சேலம், மணியனூர் ஹவுசிங் போர்டு சித்தி விநாயகர், கருமாரியம்மன் கோவிலில், நேற்று நடந்த, 108 விளக்கு பூஜையில் திரளாக பெண்கள் கலந்து கொண்டனர். சேலம், மணியனூர் ஹவுசிங் போர்டு சித்தி விநாயகர் கருமாரியம்மன் மஹா சங்கடஹர சதுர்த்தி பூஜை மாதந்தோறும் நடந்து வருகிறது. நேற்று, 108 விளக்கு பூஜையை முன்னிட்டு, அம்மனுக்கு சிறப்பு அபி?ஷகத்தை தொடர்ந்து, பெண்கள், 108 விளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.