வேணுகோபால சுவாமிகோவிலில் பாவை விழா
ADDED :3765 days ago
ஊட்டி:ஊட்டி வேணுகோபால சுவாமி கோவிலில், இந்த ஆண்டிற்கான பாவை விழா நடந்தது. செயல் அலுவலர் லோகநாதன் வரவேற்றார். நகராட்சி துணைத் தலைவர் கோபாலாகிருஷ்ணன் தலைமை வகித்தார். முன்னாள் அறங்காவலர் வரதராஜன், கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர்.திருப்பாவை, திருவெம்பாவை கட்டுரை போட்டி, பேச்சு போட்டி ஆகியவை நடந்தன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அர்ச்சகர் விஸ்வநாதன் நன்றி கூறினார்.