பண்டரிநாதன் கோவிலில் கல்யாண உற்சவம்
ADDED :3727 days ago
கரூர்: கரூர் பண்டரிநாதன் கோவிலில், வரும், 16ம் தேதி கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 10 மணிக்கு பண்டரிநாதன் சுவாமிக்கும், ஆண்டாள் சுவாமிக்கும் கல்யாண உற்சவம் நடக்கிறது. முன்னதாக சுவாமிக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் மூலம் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடக்கிறது.