உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாட்டு பொங்கலுக்கு மண் பசு சிலை தயார்

மாட்டு பொங்கலுக்கு மண் பசு சிலை தயார்

சத்தியமங்கலம்: மாட்டுபொங்கலை முன்னிட்டு கோவில்களில் வைக்கப்படும், மண் பசு சிலை விற்பனை சூடுபிடித்துள்ளது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு, தங்கள் மாட்டை நன்றாக குளிப்பாட்டி கொம்புகளுக்கு வர்ணம் பூசி கயிறுகள் புதியதாக மாற்றி, விவசாயிகள் மகிழ்வர். இந்த நாளில், தங்கள் மாடுகள் கட்டும் பட்டியில் கோலமிட்டு, அந்த கோலத்தின் மீது மண் பானை வைத்து பொங்கல் வைப்பர். கால்நடைகள் ஆண்டு முழுவதும் எவ்வித நோயின்றி ஆரோக்கியமாக இருக்க வேண்டி, அவரவர் பகுதியில் உள்ள கோவில்களில், முக்கியமாக மாதேஸ்வரன் கோவில் வளாகத்தில் வர்ணம் பூசிய மண் பசு சிலை வைத்து, அந்த பசு சிலை உருவாக்கிய கலைஞன் கண் திறக்க வைக்கும் நிகழ்வு நடக்கும். அதன்பின், அந்த மண்பசு சிலைக்கு மாலை அணிவித்து விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். இதற்காக, சத்தியமங்கலம் பகுதியில், மண் பசு சிலைகள் விற்பனைக்கு தயாராக உள்ளன. ஒரு ஜோடி, 300 ரூபாய்க்கு விற்பனையாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !