குன்றத்து முருகனுக்கு மண்பானை பொங்கல்!
ADDED :3732 days ago
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பொங்கலை முன்னிட்டு, சுவாமிகளுக்கு மண்பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டது.
கோயிலில் வழக்கமாக தினமும் வெண்கல பானையில் பிரசாதம் தயாரித்து சுவாமிகளுக்கு படைக்கப்படும். பொங்கலை முன்னிட்டு, மடப்பள்ளியில் மண்பானையில் பொங்கல் தயாரித்து, மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்ந்தனாம்பிகை அம்பாள் சன்னதிகளில் பானையுடன் பொங்கல் படைக்கப்பட்டது. பின்னர், உற்சவர் சுப்பிரமணி சுவாமி, தெய்வானை சன்னதியிலும் படைக்கப்பட்டது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே தைப்பொங்கலன்று மண்பானை பொங்கல் சுவாமிக்கு படைக்கப்படும்.